ஆசிய அளவிலான டாப் 10ல் முதலிடத்தை பிடித்த பிரபாஸ்
ADDED : 1648 days ago
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். இன்னொரு பக்கம் அந்தப்படத்தின் மூலம் உலக அளவில் உள்ள ரசிகர்களிடமும் எளிதாக ரீச் ஆகியுள்ளார். இதனால் அவரது சம்பளம் ஒரு பக்கம் ஏறியிருப்பதுடன் அவரது படங்களுக்கான வியாபார எல்லையும் விரிவடைந்துள்ளது.
இந்தநிலையில் 2021க்கான ஆசியாவை சேர்ந்த மிகவும் ஹேண்ட்சம் ஆன பத்து ஆண்கள் பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிரபாஸ் தான் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் அப்பாஸ் நக்வி என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தவிர இந்தியாவில் இருந்து டிவி நடிகரான விவியன் டி சேனா என்பவர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.