ராதே ஷ்யாம் பற்றி பூஜா ஹெக்டே கொடுத்த அப்டேட்
ADDED : 1542 days ago
மிகப்பெரிய படங்கள் பற்றிய அப்டேட் தகவல்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தாலும் கூட, சம்பந்தப்பட்ட யாருமே படம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறப்பதில்லை. அந்தவகையில் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அடுத்து ரிலீஸாக இருக்கும் அவரது ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதா என்கிற தகவல்கள் கூட அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்தநிலையில் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ரசிகர்களுடனான சோஷியல் மீடியா கலந்துரையாடலின்போது இன்னும் ராதே ஷ்யாம் படத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இது காதல் கதை என்றாலும் வழக்கமான காதல் படங்கள் போல அல்லாமல், பக்குவப்பட்ட காதலை வெளிபடுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.