17 வயதில் மகளா - சல்மான் கான் பதில்
ADDED : 1541 days ago
ஹிந்தி நடிகர் சல்மான் கான், 55 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் ‛உங்களுக்கு திருமணமாகி துபாயில் மனைவியும், 17 வயதில் மகளும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛அது உண்மையல்ல, இவருக்கு பதில் சொல்லி என் கண்ணியத்தை நிரூபிக்கணுமா. எனக்கு மனைவி கிடையாது. நான் இந்தியாவில் வாழ்கிறேன். கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசிக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும் '' என்றார் சல்மான்.