விக்னேஷ்சிவனை கவர்ந்த டான்சிங் ரோஸ்!
ADDED : 1641 days ago
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை கடந்த 22-ந்தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையே திமுகவை படத்தில் தூக்கிப்பிடித்திருப்பதாக விமர்சனங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டைரக்டர் விக்னேஷ் சிவன் சார் பட்டா பரம்பரை படம் குறித்து டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நேற்றுவரை டைட்டனிக் ரோஸ்ஸை ரசித்தேன். இன்றிலிருந்து டான்சிங் ரோஸ்ஸை ரசிக்கிறேன். சார்பட்டா பரம்பரை ஒரு அற்புதமான திரைப்படம் என்று பதிவிட்டுள்ளார்.
அந்த அளவுக்கு இந்த படத்தில் டான்சிங் ரோஸ் வேடத்தில் நடித்துள்ள ஷபீர் தனது உடல்மொழி நடிப்பினாலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.