உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மழை பாடல்களைத் தவிர்க்கும் நிதி அகர்வால்

மழை பாடல்களைத் தவிர்க்கும் நிதி அகர்வால்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மழைப் பாடல்கள் என்பது அவ்வப்போது இடம் பெறும். குறிப்பாக கதாநாயகிகளை கிளாமராகக் காட்ட அந்த மழைப் பாடல்களைப் படமாக்குவார்கள். ஒரு காலத்தில் அப்படிப்பட்ட பாடல்கள் அடிக்கடி வருவதுண்டு, இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது. மழைப் பாடல்கள் இல்லை என்றாலும் மழை காட்சிகள் பல படங்களில் இடம் பெறத்தான் செய்கிறது.

தமிழில் 'பூமி, ஈஸ்வரன்' படங்களில் நடித்த நிதி அகர்வால் மழைப் பாடல்களில் நடிப்பது பிடிக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “மழைப் பாடல்களில் நடிப்பது சுலபமானதல்ல. முழுவதுமாக நனைந்து, பின்னர் நம்மை உலர வைத்து, மீண்டும் நனைவது மிகவும் கடினமானது. மேலும், தண்ணீர் பொழியும் போது நம் கண்களைத் திறந்து கொண்டு நடிப்பது சவாலா ஒன்று. அதனால், மழைப் பாடல்களில், நடிப்பது பற்றி எண்ணம் தற்போது இல்லை,” என்கிறார்.

நிதி அகர்வால் தற்போது உதய்நிதி ஜோடியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !