ஓடிடி பிக்பாஸ்: தொகுத்து வழங்குகிறார் கரன் ஜோஹர்
ADDED : 1615 days ago
பாலிவுட்டின் பவர்புல் ஆளுமையாக இருப்பவர் கரண் ஜோஹர். தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கும் 15வது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் 8ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து கரன் ஜோஹர் கூறியிருப்பதாவது: நானும் என் அம்மாவும் பிக்பாஸின் தீவிர ரசிகர்கள். ஒரு நாள் கூட நிகழ்ச்சியை தவறவிட மாட்டோம் அது எங்களுக்கு பெரிய பொழுதுபோக்காக இருந்தது. இப்போது நான் தொகுத்து வழங்கும்போதும் அதே உற்சாகத்துடன் செய்வேன். இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. என்றார்.