நாளை தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக்
ADDED : 1535 days ago
நடிகர் தனுஷ் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்தை முடித்ததும் தான் ஏற்கனவே நடித்து வந்த கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்நிலையில் நாளை (ஜூலை 28) 11 மணிக்கு இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் உடன் வெளியாகும் என படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளது.