கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய சாய் தன்ஷிகா
ADDED : 1578 days ago
நடிகை சாய் தன்ஷிகா தமிழில் பேராண்மை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் தன்ஷிகாவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரஜினியுடன் கபாலி அவருக்கு மகளாக நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதையடுத்து சோலோ, காலக்கூத்து, இருட்டு, சினம் ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார்.
நடிகைகள் அடிக்கடி தங்களது போட்டோஷூட் படங்களை வெளியிட்டாலும் தன்ஷிகாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாவது இல்லை. இந்நிலையில் கடற்கரையில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றன.