உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்கனாவின் வித்தியாச தோற்றத்துக்கு வரவேற்பு

கங்கனாவின் வித்தியாச தோற்றத்துக்கு வரவேற்பு

நடிகை கங்கனா ரணாவத் தற்போது தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையப்படுத்திய இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாக உள்ளது.

கங்கனா, இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் கங்கனா. தற்போது கங்கனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தகாட்'. இந்த படத்திற்காக தனது உடல் எடையை ரொம்பவே குறைத்து ஒல்லியான உடலமைப்புடன் இருக்கிறார். வித்தியாசமான கங்கனாவின் இந்த தோற்றம் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !