விஜய்சேதுபதியின் மாஸ்டர் செப் : ஆகஸ்ட் 7 முதல் ஒளிபரப்பு
ADDED : 1578 days ago
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான மாஸ்டர் செப் எனும் சமையல் கலை நிகழ்ச்சி, முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் தொகுத்து வழங்குகிறார். இதன் நடுவர்களாக பிரபல செப்களான கவுசிக், ஆர்த்தி, ஹரிஷ் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி 13 மாதங்கள் வரை தொடர்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது.