விருதுகளை குவித்த மலேசிய தமிழ் படம்
ADDED : 1534 days ago
மலசேியாவில் இருக்கும் தமிழரான விக்னேஷ் பிரபு தனது சகோதரர் தனேஷ் பிரபு உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‛பரமபதம்'. விளையாட்டை மையமாக வைத்து பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. இப்படி ஒரு படம் உருவாவது மலேசியாவில் இது தான் முதல்முறை. பாலன்ராஜ், ஜெகதீஷ் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் 30க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று 18 விருதுகளை வென்றுள்ளது. மலேசிய சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்த படம் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருதுக்கும் இப்படம் தேர்வானது. கொரோனா அச்சுறுத்தல் தீர்ந்த பிறகு இப்படத்தை உலகம் முழுக்க வெளியிட எண்ணி உள்ளனர்.