உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தைப்பருவ படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்

குழந்தைப்பருவ படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல், கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

நிறைய வாய்ப்புகள் குவிந்தாலும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடிக்கிறார். தமிழில் 'இந்தியன் 2' படம் மட்டும் கைவசம் இருந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் தீவிரமாக இருக்கும் காஜல் அகர்வால் தனது குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை சோ க்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !