இதயத்தை திருடாதே சீசன் 2-வில் இணைந்த மவுனிகா தேவி
ADDED : 1532 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான மெளனிகா தேவி இதயத்தை திருடாதே சீசன் - 2 வில் மித்ரா டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியலில் நிலா மற்றும் தியா என்ற இரட்டை வேடத்தில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை மவுனிகா தேவி. இதனையடுத்து பூவே செம்பூவே தொடரிலும் பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் இதயத்தை திருடாதே சீசன் - 2 வில் மித்ரா எனும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கறார். இந்த செய்தியை தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.
மவுனிகா தேவி சாலையோரம், ஹர ஹர மகாதேவகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.