தெலுங்கில் பாடகராக பிரபலமாகும் அனிருத்
ADDED : 1547 days ago
தமிழில் ரஜினி, கமல்(இந்தியன் 2), விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்கும் அனிருத், தெலுங்கிலும் நானி, ரவிதேஜா நடித்த படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்றாலும் அந்த படங்களின் பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் கீரவாணி இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அனிருத். அந்த பாடல் ஆகஸ்ட் 1-ந்தேதியான வெளியாகிறது. அதையடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரி பாட்டா என்ற படத்திற்காகவும் தமன் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் அனிருத். இந்த பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.