உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படம்

விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படம்

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை தனது எல்லையை விரிவுபடுத்தி விட்டார் விஜய் சேதுபதி. அதன்காரணமாக அடுத்தபடியாக ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது.

அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்குகிறது. ரஞ்சித் ஜெயக்கொடி இதற்கு முன்பு புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !