உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் 61வது படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்

அஜித்தின் 61வது படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை என்ற இரண்டு படங்களையும் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் 61ஆவது படத்தையும் எச்.வினோத் இயக்க போனி கபூரே தயாரிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அஜித்தின் அடுத்த படத்தையும் மூன்றாவது முறையாக எச்.வினோத்தே இயக்க, ஏற்கனவே அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் அதைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தையும் தயாரிக்கிறது. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !