நேரடியாக டிவியில் பூமிகா
ADDED : 1528 days ago
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படம் வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்தப்படியாக இவர் நடித்துள்ள பூமிகா படம் ரேடியாக டிவியில் வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ்ச் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாக உருவாகி உள்ள படம் பூமிகா. புதியவர் ரதீந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார். மலைப்பகுதியில் ஹாரர், திரில்லர் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் தற்போது உள்ள சூழலில் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலை. இதனால் படத்தை நேரடியாக டிவியில் வெளியிடுகின்றனர். ஆக., 22ல் விஜய் டிவியில் 3மணிக்கு இப்படம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து சிலநாட்களில் இப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.