குழந்தைகளுக்கான படம் இயக்கும் அருண் வைத்தியநாதன்
ADDED : 1552 days ago
அச்சமுண்டு அச்சமுண்டு படம் மூலம் இயக்குனரான அருண்வைத்தியநாதன், குழந்தைகளை மையமாக கொண்ட படம் ஒன்றை தயாரித்து இயக்க உள்ளார். அவர் கூறியதாவது: தமிழில் குழந்தைகளுக்கான படம் குறைவு. அவர்களுக்காக எடுத்தாலும், காதல், சண்டை காட்சிகள் அதில் இருக்கும். அவ்வாறு இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளை வைத்தே காட்டும் முயற்சி தான் இப்படம். அன்புக்கு ஒரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம். குழந்தைகளை மட்டுமின்றி அனைத்து வயதினரையும் கவரும். படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.