உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குஞ்சாக்கோ படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய கவுதம் மேனன் - அல்லு அர்ஜுன்

குஞ்சாக்கோ படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய கவுதம் மேனன் - அல்லு அர்ஜுன்

மலையாள திரைப்படங்களின் ரீமேக் உரிமையை வாங்குவதிலும் அவற்றை உடனடியாக படமாக்குவதிலும் பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் ஏற்கனவே ட்ரைவிங் லைசென்ஸ், லூசிபர், அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட சில படங்களின் ரீமேக் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தற்போது நாயாட்டு என்கிற மலையாள படத்தின் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் ரைட்ஸும் தற்போது கைமாறியுள்ளது என அந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் மார்ட்டின் பரக்கத் கூறியுள்ளார்..

இந்தியில் அய்யப்பனும் கோஷியும் பட ரீமேக் ரைட்ஸை கைப்பற்றிய ஜான் ஆபிரஹாம் தான் இந்தப்படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார். அதைவிட ஆச்சர்யமாக தமிழ் ரீமேக் ரைட்சை இயக்குனர் கவுதம் மேனனும், தெலுங்கு ரீமேக் ரைட்ஸை அல்லு அர்ஜுனும் வாங்கியுள்ளனர். குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்தப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

போலீஸ்காரர்கள் தெரியாமல் ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டால், அதுவரை நண்பர்களாக இருந்த சக போலீஸ் அதிகாரிகளே அரசு எந்திரத்தின் உத்தரவுப்படி அவர்களை எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. இருந்தாலும் ஸ்டார் ஹீரோவுக்கான படமாக இல்லாத நிலையில் இதன் ரீமேக் ரைட்ஸை அல்லு அர்ஜுன் எதற்காக வாங்கினார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !