கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
ADDED : 1636 days ago
‛வாழ்க்கைப் பயணம்' என்ற கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை இயக்குனர் செந்தில் செல்லம் தயாரித்து, இயக்கியுள்ளார். இதில், அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., இளபுகழேந்தி நடித்துள்ளார். இக்குறும்படம் ஒரே ஷாட்டில் சிறைக்கைதிகளின் பார்வையில் இருந்து, மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை உருவாக்க எடுத்துள்ளனர்.
இயக்குனர் கூறுகையில், ‛‛முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய கலைஞரின் கண்ணம்மா படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். திரு.வி.க., பூங்கா படத்தை இயக்கி, நடித்தேன். தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக இக்குறும்படத்தை திருவள்ளுவரின் குறளோடு முதல்வரை ஒப்பிட்டு உருவாக்கியுள்ளேன். இதை முதல்வர் பார்வையிட்டு வெளியிட வேண்டும் என்பதே ஆசை,'' என்றார்.