அர்ஜூன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவில் அனிகா
ADDED : 1609 days ago
நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ள சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் அனிகா சுரேந்தர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 16-வயது மட்டுமே ஆன அனிகா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு இருக்கும்.
திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருந்த இவருக்கு தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் அனிகா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிகா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில் அவர் பங்குபெறும் முதல் ரியாலிட்டி ஷோவாக இது அமையும்.