நான் நீ நாம்: பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படம்
ADDED : 1530 days ago
காதல், கல்லூரி, வழக்கு எண் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இந்த படங்களுக்கு பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய யார் இவர்கள், ரா ரா ராஜசேகர் படங்கள் வெளிவரவில்லை. இதனால் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தினார். அசுரன், வானம் கொட்டட்டும் படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நீ நான் நாம் என்ற படத்தை பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். இதனை புளூமூன் கிரியேஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. வீரா, சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்கள். எஸ்.கே.சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவீத் ரியாஸ் இசை அமைக்கிறார். காதல் படத்தை போன்று இது ஒரு உருக்கமான, உண்மையான காதல் கதை.