உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எடை குறைகிறது : குஷ்பு மகிழ்ச்சி

எடை குறைகிறது : குஷ்பு மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பு. இயக்குனர் சுந்தர் .சியுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். டிவி பக்கம் சென்று நிகழ்ச்சி தொகுப்பு, சீரியல் நடிப்பு என அந்தப் பக்கமும் பிரபலமடைந்த பிறகு அரசியலுக்குச் சென்றார். திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளில் பணியாற்றி தற்போது பாஜகவில் இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார். அடுத்ததாக தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். தவிர சீரியலிலும் தலை காட்ட துவங்கி உள்ளார்.

குஷ்பு கடந்த பல வருடங்களாகவே கொஞ்சம் குண்டாகவே இருக்கிறார். நாயகியாக நடிக்கும் போது அதுவும் அவருக்கு பிளஸ் பாயின்டாகவே இருந்தது. இருப்பினும் இன்னும் எடை குறைப்பு செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்து தீவிர எடை குறைப்புப் பயிற்சியில் ஈடுபட்டார்.

“கடின உழைபபு கடைசியாக ரிசல்ட்டைத் தர ஆரம்பித்துவிட்டது. எடை குறைப்பு லட்சியம், பிட்னஸ் முயற்சி,” என மகிழ்ச்சியுடன் தனது உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது பற்றி டுவிட்டரில் பதிவிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !