திருச்சிற்றம்பலம் - தனுஷின் 44 பட தலைப்பு
ADDED : 1519 days ago
யாரடி நீ மோகனி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷின் 44வது படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பாரதிராஜாவும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமானது. இந்நிலையில் படத்திற்கு கடவுள் சிவனை குறிக்கும் ‛திருச்சிற்றம்பலம்' என பெயர் சூட்டி உள்ளனர். இதற்கான அறிவிப்பு மாலை 6மணிக்கு வெளியானது.