உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நேரத்தில் இரண்டு ரீமேக் படங்களில் நடிக்கும் சிரஞ்சீவி

ஒரே நேரத்தில் இரண்டு ரீமேக் படங்களில் நடிக்கும் சிரஞ்சீவி

தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி, அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக் மற்றும் 2015ல் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் ரீமேக்கிலும் நடிக்கப் போகிறார். அண்ணன் - தங்கை கதை என்றாலும் தெலுங்கு ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறாராம் படத்தை இயக்கும் மெஹர் ரமேஷ். இந்த படத்தின் பூஜை அடுத்தமாதத்தில் நடைபெறுகிறதாம். அதனால் மோகன்ராஜா இயக்கும் லூசிபர் ரீமேக் படத்தில் நடித்துக்கொண்டே வேதாளம் ரீமேக்கிலும் நடிக்கப்போகிறாராம் சிரஞ்சீவி. இந்த இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டில் வெளியாகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !