உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிட் சென்ட்டிமென்ட் : ஸ்ருதிஹாசனை துரத்திய இயக்குனர்

ஹிட் சென்ட்டிமென்ட் : ஸ்ருதிஹாசனை துரத்திய இயக்குனர்

தற்போது தெலுங்கில் அகந்தா என்ற படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா, அடுத்து கோபிசந்த் மிலினேனி இயக்கும் படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கப்போகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனைத்தான் அழைத்தார் கோபிசந்த் மிலினேனி. ஆனால் பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வரும்போது பாலகிருஷ்ணா போன்ற சீனியர்களுடன் நடித்தால் அது தனது மார்க்கெட்டை பாதித்து விடும் என்று நடிக்க மறுத்தார் ஸ்ருதிஹாசன்.

இருப்பினும் இதற்கு முன்பு தனது இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த பலுப்பு, கிராக் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததால் அந்த சென்டிமென்ட்டுக்காக தனது புதிய படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி அல்லாத ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்குமாறு தற்போது ஸ்ருதிஹாசனை கேட்டு வருகிறாராம் கோபிசந்த் மிலினேனி. அதற்கு அவரும் சம்மதம் சொல்லி விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !