போலீஸ் வேடத்தில் நடிக்கும் வனிதா
ADDED : 1520 days ago
1995ல் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு ராஜ்கிரனுடன் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். அதையடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர், பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக, பிரசாந்த் நடித்து வரும் அந்தாதூன் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில நடிக்கும் வனிதா கொடூரன் என்ற இன்னொரு படத்தில் லீலாவதி என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அந்த படத்தின் ஸ்பாட்டில் போலீஸ் கெட்டப்பில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் தவிர, அனல்காற்று, 2ஜி அழகானது காதல், பிக்கப் டிராப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.