உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவின் ரசிகன் நான் - கன்னட நடிகர் சிவராஜ் குமார்

தமிழ் சினிமாவின் ரசிகன் நான் - கன்னட நடிகர் சிவராஜ் குமார்

கன்னடத்தில் சிவராஜ் குமார், அஞ்சலியை வைத்து ‛பைராகி' படத்தை இயக்குகிறார் நம்மூர் விஜய் மில்டன். சிவராஜ் குமார் கூறுகையில், ‛‛நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த விசயம்.

இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். விஜய் மில்டனிடம் சினிமா குறித்த அறிவு கொட்டிக் கிடக்கிறது. மக்கள் 35 வருடமாக என்னை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !