உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாதனைகளை குவிக்கும் அஜித்தின் வலிமை பாடல்

சாதனைகளை குவிக்கும் அஜித்தின் வலிமை பாடல்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேலு சில போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர்.

பின்னர் வலிமை படத்தின் முதல் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி தற்போது வெளியாகியுள்ளது. யுவனின் துள்ளலான இசையில் யுவன் மற்றும் அருண்ராக் குல்கர்னி குரலில் துடிப்பான பாடலாக அமைந்துள்ளது. தற்போது நாங்க வேற மாறி பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து சிகரம் தொட்டுள்ளது. மேலும் பாடலுக்கு 1 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !