தலைகீழாக நின்று யோகா செய்யும் மாளவிகா
ADDED : 1525 days ago
உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு, ரோஜாவனம் என பல படங்களில் நடித்தார். 2007ல் திருமணம் செய்து கொண்டார். என்றாலும் 2009 வரை பல படங்களில் தலைகாட்டி வந்தார் மாளவிகா.
சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா, தான் தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதோடு, யோகா என்பது கடல். சூரியன் மற்றும் மூச்சடைக்கக்கூடிய காட்சிகள், உள் அமைதியை கண்டறிய உதவுகிறது. இது உண்மையிலேயே மிகவும் பிரமிப்பாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு பிக்பாஸ் ரம்யா பாண்டியனும் தலைகீழாக நின்றபடி யோகாசனம் செய்யும் போட்டோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.