பாலுமகேந்திரா உதவியாளர் இயக்கும் முதல் முத்தமே இறுதி முத்தம்
ADDED : 1568 days ago
பாலா, வெற்றிமாறன் வரிசையில் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து மற்றொரு இயக்குனர் ஆர் பி சாய், இயக்கும் படம் முதல் முத்தமே இறுதி முத்தம். ஜேசி மீடியா சார்பில் வசந்த குமார பிள்ளை மற்றும் முரளி கிருஷ்ணா தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை மோகன்ராம், ஒளிப்பதிவு ஹரிகாந்த்.
இந்த படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியனும், நாயகியாக மேக்னா எலனும் நடிக்கிறார்கள் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாம் ஆண்டர்சன், ரோஹித் பாலையா, எஸ் கௌதம், ஜூனியர் டிஆர் உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஆர்.பி.சாய் கூறியதாவது: அம்மாவுக்கு மகனுக்குமான பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படம். கோவையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படமாகிறது. முழு படமும் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் படமாகிறது. என்றார்.