உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பகத்பாசிலுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

பகத்பாசிலுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

மாஸ்டர் படத்தை அடுத்து கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடிக்க, பகத்பாசில் ஒரு விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இந்நிலையில் இன்றைய தினம் பகத்பாசிலின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் விக்ரம் படத்தில் பகத்பாசில் நடிக்கும் கேரக்டரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதோடு, உங்களுக்கு இது அற்புதமான பிறந்தநாள் மற்றும் அற்புதமான ஆண்டு என்றும் பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !