உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் போன்று வலியுடன் வாழும் மம்முட்டி

அஜித் போன்று வலியுடன் வாழும் மம்முட்டி

நடிகர் அஜித்துக்கு முதுகு தண்டுவடம், கால், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பைக் விபத்தின் போதும், சண்டை காட்சியில் நடித்தபோதும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது முதுகு தண்டில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு விட்டது என்று சமீபத்தில் சண்டை இயக்குனர் கனல் கண்ணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அஜித் அவ்வப்போது சிறிய ஆபரேஷன்கள் செய்து கொண்டு சமாளித்து வருகிறார்.

இதேபோன்று கடந்த 21 ஆண்டுகளாக தசை நார் கிழிசலுக்கு ஆபரேஷன் செய்யாமல் வலியுடன் வாழ்ந்து வருகிறார் மம்முட்டி. கோழிகோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்த அவர் இதுகுறித்து அங்கு பேசியதாவது:

என் இடது காலில் இருக்கும் தசைநார் கிழிந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் காலின் நீளம் குறைந்துவிடும் என்று டாக்டர்கள் கூறினார்கள். என் ஒரு காலின் நீளம் மட்டும் குறைந்தால் அது கேலி கிண்டலுக்கு ஆளாகும். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அவ்வப்போது வலி பிரச்சினை வரும். என்றாலும் அதை சமாளித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்றார்.

இந்த நிகழ்ச்சி கொரோனா விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாக விழா நடத்தியவர்கள் மீதும், கலந்து கொண்ட மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் மீதும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !