உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசந்தபாலனின் படத்தில் வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம்

வசந்தபாலனின் படத்தில் வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம்

காவியத்தலைவன் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் என்ற படத்தை இயக்கினார் வசந்த பாலன். ஆனால் அப்படம் சில வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜூன் தாஸை வைத்து தனது புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை வசந்தபாலன் அவரது நண்பர்கள் உடன் இணைந்து தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு முக்கிய வேடங்களில் நடிக்க அர்ஜூன் சிதம்பரம், நடிகை வனிதா விஜய குமார் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !