சிம்பு - கவுதம் மேனன் படத்தில் மராத்தி நடிகை?
ADDED : 1521 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்காக 15 வயது பையனைப்போன்று தனது உடல் எடையை குறைத்திருக்கிறார் சிம்பு. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் போஸ்டர் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும் மராத்தி நடிகை கயடு லோஹர் என்பவர் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இவர் மராத்தி மட்டுமின்றி மலையாளம், கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். ஐசரிகணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.