ஒரே படத்தில் 3 டாப் ஹீரோயின்கள்
பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் வழக்கம் ஷோலே காலத்திலேயே தொடங்கி விட்டது. ஹீரோயின்கள் இணைந்து நடிப்பது அபூர்வமாகவே நடக்கும். அந்த வகையில் தற்போது, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஆலியா பட், பிரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைப் மூவரும் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் இயக்குனர் பர்கான் அக்தர் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஜீ லீ ஸாரா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இது படத்தில் நடிக்கும் 3 நாயகிகளின் கதாபாத்திரங்களின் பெயர்கள். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒரு காரின் படமும், அந்த காருக்குள் ஒரு சாலை மற்றும் பலவித கட்டிடங்கள், சோலைகளின் படமும் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 பெண்களின் ஒரு கார் பயணத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்ட படமாக இருக்கும் என்று கணிக்க முடிகிறது. 3 நடிகைகளின் சம்பளம் மட்டுமே 25 கோடி வரும். அப்படியென்றால் படமும் பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கும் என்று கணிக்ககிறார்கள்.