உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர், டப்பிங் கலைஞர் காளிதாஸ் காலமானார்

நடிகர், டப்பிங் கலைஞர் காளிதாஸ் காலமானார்

திருச்சியில் புகழ்பெற்ற நாடக நடிகர் தேவர்ஹால் விஸ்வத்தின் மகன் வி.காளிதாஸ். செய்தி வாசிப்பாளர் சோபனா ரவி, நடிகை சொர்ணமால்யா ஆகியோரின் உறவினர். 6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட காளிதாஸ் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு டப்பிங் கலைஞராக அறிமுகமானார். 3 ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசி உள்ளார்.

அதன்பிறகு காமெடி மற்றும் வில்லன் நடிகராகி பல படங்களில் நடித்தார். பின்னர் தொலைக்காட்சிக்கு வந்த இவர் மாயா மாரீசன் என்ற தொடரில் மாயாவியாக நடித்தார். வடநாட்டில் தயாராகி ஒளிபரப்பான புராண தொடர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தார்.

65 வயதான காளிதாஸ் ரத்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது மனைவி வசந்தா ஏற்கெனவே இறந்து விட்டார். விஜய் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர். பார்கவி சினிமாவில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !