மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1487 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1487 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். அதோடு கார் பந்தயங்களில் கலந்துக் கொண்டு சாதனை செய்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி புகைப்படக் கலைஞராகவும், சிறிய ரக விமானங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கிச் சுடுதலில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், சென்னையில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் அடிக்கடி சென்று துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த பயிற்சியின் முடிவில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், அந்த படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்கியுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் ஐதராபாத்தில் உள்ள துப்பாக்கி பயிற்சி அகடமியில் அஜித் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் அசத்தலான துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1487 days ago
1487 days ago