அட்ஜஸ்ட் செய்த பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா போனஸ்
ADDED : 1522 days ago
தென்னிந்திய அளவில் பிசியாக நடித்துவந்த புட்டபொம்மா அழகி பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளதால் முன்னைவிட கூடுதல் பிஸியாகி விட்டார். இந்தநிலையில் தான், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பூஜாவை தேடி வந்தது. ஏற்கனவே த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் டைரக்சனில் நடித்த இரண்டு படங்கள் தான் பூஜா ஹெக்டேவை ராசியான நடிகையாக மாற்றின.
அதேபோல மகரிஷி படத்தை தொடர்ந்து மீண்டும் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் வாய்ப்பு வேறு. ஒருவாறாக தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் கொடுத்துவிட்டார் பூஜா ஹெக்டே. இதனால் வழக்கமாக இரண்டரை கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டேவுக்கு போனசாக 5௦ லட்சம் சேர்த்து 3 கோடியாக சம்பளத்தை உயர்த்திவிட்டதாம் தயாரிப்பாளர் தரப்பு.