காமெடி நடிகருக்காக திட்டத்தை மாற்றிய சந்தீப் கிஷன்
ADDED : 1522 days ago
மாநகரம் படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறியவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் ஓரளவு ரசிகர்களையும் மினிமம் கியாரண்டி மார்க்கெட்டையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ள சந்தீப் கிஷன் தற்போது தெலுங்கில் விவாக போஜனம்பு என்கிற படத்தை தயாரித்துள்ளார்.
கொரோனா முதல் அலையின்போது பிறப்பிக்கப்பட ஊரடங்கு உததரவு சமயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படம் காமெடியாக உருவாகியுள்ளது. காமெடி நடிகரான சத்யா என்பவர் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடும் விதமாக முதலில் பேசிவந்த சந்தீப் கிஷன், தற்போது அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு நேரடியாக தியேட்டரிலேயே ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துள்ளாராம்.