ஒரே டைட்டிலில் இரண்டுமுறை நடிக்கும் கனிகா
ADDED : 1521 days ago
எப்போதாவது அபூர்வமாக ஒரு மொழியில் வெளியான படத்தின் டைட்டிலில் பல வருடங்கள் கழித்து இன்னொரு மொழியிலும் படங்கள் வெளியாவது உண்டு. அப்படி வெளியாகும் இரண்டு படங்களின் கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் இரண்டு படங்களிலும் நடக்கும் வாய்ப்பு ஒரே நபருக்கு கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயம்.
ஆனால் அப்படி ஒரு வாய்ப்பை பெற்றுள்ள அதிர்ஷ்டசாலி யாரென்றால் நடிகை கனிகா தான். ஆம்.. தற்போது அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்துவரும் 'கோப்ரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் கனிகா. அதேசமயம் கடந்த 2௦12ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் நடிகர் லால் இயக்கத்தில் வெளியான கோப்ரா என்கிற படத்திலும் கனிகா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..