தந்தை மகன் மூலமாக பாலிவுட்டில் நுழைந்த குரு-சிஷ்யன்
ADDED : 1521 days ago
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று படம் இயக்கியவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பார்த்திபனும் தற்போது முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் தயாரித்து நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்தை இந்தியில் இவரே இயக்குகிறார். பார்த்திபன் நடித்த ஒற்றை கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
ஆச்சர்யமாக கடந்த 1986ல் பார்த்திபனின் குருநாதரான இயக்குனர் பாக்யராஜும் ஆக்ரி ரஸ்தா என்கிற படம் மூலமாக பாலிவுட்டில் நுழைந்தார். ஒரு கைதியின் டைரி பட ரீமேக்காக ஆக்ரி ரஸ்தா என்கிற பெயரில் அவர் இயக்கிய இந்தப்படத்தில் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் இயக்கிய ஒரே இந்திப்படமும் இதுதான். அந்தவகையில் 25 வருடங்களுக்கு பிறகு அமிதாப்பின் மகன் மூலமாக பாக்யராஜின் சீடரான பார்த்திபனும் பாலிவுட்டில் படம் இயக்கம் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.