நாய் சேகர் படம் மூலம் களமிறங்கும் வடிவேலு
ADDED : 1521 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இயக்குனர் ஷங்கருடனான பிரச்னைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஹீரோவாக நடிக்க சில பட வாய்ப்பு வந்தாலும், அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கொரோனா காலக்கட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டு, அதில் 10 கதைகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதில், சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படம் மட்டும் முதலில் துவங்க இருப்பதாக தெரிகிறது. ஆடி மாதம் முடிவடைந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, நிறைய கதைகளில் என்னிடம் கேட்டார்கள். அதில் 10 கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறேன். வரிசையாக தொடர் அறிவிப்புகள் வரும். ரசிகர்கள் இனி தொடர்ந்து என்னை திரையில் பார்க்கலாம், என்றார்.