ஹன்சிகாவை தொடர்ந்து மாலத்தீவுக்கு சென்ற ஆண்ட்ரியா
ADDED : 1530 days ago
சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அதன் படங்களை பகிர்ந்துவந்தனர். நடிகை ரைசா வில்சன் மற்றும் சின்னத்திரை நடிகை ஷிவானி நாரயணன் ஆகியோர் மாலத்தீவுக்கு சென்று அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர்.
ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த கவர்ச்சி படங்களை பகிர்ந்தார். ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.