களமிறங்கிய நான்காவது தலைமுறை
ADDED : 1525 days ago
அமெரிக்காவில் வசிக்கும் நடன இயக்குனர் ரகுராம் மகள் சுஜா ரகுராம், ‛டேக் இட் ஈஸி' என்ற ஆங்கில படத்தை இயக்கியுள்ளார். அவர் அளித்த பேட்டி : எம்.கே.தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் பேரன் என் தந்தை ரகுராம். அவரின் மூத்த மகளான நான், திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆனேன். இப்போது ‛டேக் இட் ஈஸி' படத்தை இயக்கி உள்ளேன். எங்கள் மகன் திரிஷுல் ஆர்.மனோஜ், மகள் சனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள சிறப்பு பாடல் ஒன்று படத்தில் உள்ளது. நட்பை விளக்கும் இப்படம் விரைவில் உலகம் முழுக்க வெளியாகிறது என்றார்.