அன்புடன் விடைபெற்றாள் குஷி
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் அன்புடன் குஷி. இதில் அன்பு என்ற கேரக்டரில் பிரஜின் நடிக்க அவருக்கு ஜோடியாக, குஷி என்ற கேரக்டரில் ஷ்ரேயா அஞ்சன் நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த தொடரில் குஷி கதாபாத்திரத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்தார். திடீரென அவர் அந்த சீரியலை விட்டு விலகினார். அதன்பிறகு ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வந்தார். இவரும் இந்த சீரியலிலிருந்து விலகினார். கடைசியாக ஷ்ரேயா அஞ்சன் நடித்து வந்தார்.
இந்த தொடர் 341 எபிசோடுகளுடன் முடிவடைந்து விட்டது. அன்புக்கும், குஷிக்கும் அவசர கல்யாணம் நடத்தி சுபம் போட்டுவிட்டார்கள். திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே இந்த தொடர் முடிந்திருப்பது அனைவருக்கும் வருத்தம் தான். முக்கிய கேரக்டரான குஷியில் 3 பேர் மாறி மாறி நடித்தால் கதையுடன் பார்வையாளர்கள் ஒட்ட முடியாமல் போனதே சீரியலின் டிஆர்பி ரேட்டிங்க சரிய காரணம் என்றும், அதனால் தான் நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.