ருத்ர தாண்டவம் படத்திற்கு யுஏ சான்று
ADDED : 1508 days ago
ஜாதி ஆணவ கொலையை மையமாக வைத்து வெளியான திரௌபதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஜி.மோகன். அவர் இயக்கி உள்ள இரண்டாது படம் ருத்ர தாண்டவம். இதில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சினிமாவில் ஹீரோயின் ஆகிறார். அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர். இவர்கள் தவிர ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.