புதுச்சேரி முதல்வரிடம் விஜய் சேதுபதி பேசியது என்ன?
ADDED : 1518 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல்''. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதற்காக விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே நேற்று (ஆக., 19) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விஜய் சேதுபதி சந்தித்து பேசினார். இதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைக்க சொல்லி முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார் விஜய் சேதுபதி. முதல்வரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.