சன்னி லியோனின் உடற்பயிற்சி வீடியோவுக்கு மில்லியன் லைக்குகள்
ADDED : 1502 days ago
நடிகை சன்னி லியோன் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நடிகையாக விளங்குகிறார். ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், தற்போது அதிலிருந்து வெளியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம்-2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் பாடல்களில் மட்டும் நடித்து வருகிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சன்னி லியோனுக்கு எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் 40 வயதை எட்டிய சன்னி லியோன் இப்போதும் இளமையாக இருக்கிறார். இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இப்போதும் இளமையாக இருப்பதற்கான ரகசியம் குறித்து சமீபத்தில் விளக்கிய சன்னி லியோன், உடற்பயிற்சி செய்வது, குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுவது என்றார்.
மேலும் நான் ஒரு உணவு பிரியர் ஆனால் எனது பிட்னஸை சரியாக பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்வேன் எனக் கூறும் சன்னி லியோன், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், வாழ்க்கைக்கு தேவை ஹாட் யோகா என்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை சமநிலை செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனை 47.8 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். தற்போது அவர் பகிர்ந்துள்ள உடற்பயிற்சி செய்யும் யோகா மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.