விக்ரம் படத்தில் இருந்தே காப்பியடிக்கப்பட்ட மகான் போஸ்டர்
ADDED : 1549 days ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டு அதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. பைக்கில் விக்ரம் அமர்ந்திருப்பது போலவும் அவரது தலையில் கொம்பு முளைத்திருப்பது போலவும் அவரது முதுகிற்கு பின்னால் இருந்து கைகள் பல விரிந்திருப்பது போலவும் அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல இது எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணவேண்டிய அவசியமே இல்லாமல், ஏற்கனவே விக்ரம் நடித்த சாமி படத்தில் இருந்தே காப்பி அடித்து இதை உருவாக்கியுள்ளார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் சாமி படம் வெளியான சமயத்தில் பல கைகளுடன் துப்பாக்கி, கத்தி பிடித்தபடி விக்ரம் காட்சி அளிக்கும் போஸ்டர் அப்போது ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் அந்த போஸ்டர் கூட, அப்போது பிரசாந்த் நடிப்பில் தயாராகி வந்த ஜெய் படத்தின் போஸ்டரை பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்கிற சர்ச்சை வேறு அப்போது எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.